VELLOREHEADLINE: காட்பாடி மற்றும் கசத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் !!
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு 1000 பேருக்கு காட்பாடியில் சிக்கன் பிரியாணி வழங்கிய வேலூர் துணை மேயர் சுனில்குமார் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு (, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் முன்னிட்டு) வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாலை அணிவித்து 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.
அதேப்போல் காட்பாடி கசம் பகுதியில் உள்ள முதியோர், பாலர் குடும்ப கிராம பண்ணையில் ஆதரவற்றோர் சுமார் 200 பேருக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு துணை மேயர் சுனில் குமார் சிக்கன் பிரியாணி வழங்கினார். முன்பாக பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இதில் கசம் பண்ணை இயக்கு நர் கிருபாகரன் டேனியல், வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment