VELLOREHEADLINES : வேலூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் ஏ. சி.சண்முகம் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
வேலூர் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு செய்தியில்:
தமிழகத்தில் பல திரு நாட்கள் வந்தாலும் கூட தமிழ் புத்தாண்டு தனிச்சிறப்பு வாழ்ந்தது ஆகும்.
பாரதப் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் பேசும் மேடைகளில் தமிழர்கள் பற்றியும், மொழியின் சிறப்பு பற்றியும் விவரமாக பேசி வருகின்றனர்.
தமிழ் மொழியிக்கும், தமிழ் இனத்திற்கும் ஆண்டு விழா தான் தமிழ் புத்தாண்டு ஆகும். உலக தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளங்கள் பெருகி பூரண நலத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment