VELLOREHEADLINE: வேலூர் ஸ்ரீபுரம்தங்க கோயிலில் மகாலட்சுமிக்கு தங்கத்தினால் ஆன ஆடை !
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் மகாலட்சுமிக்கு 6 கிலோ எடையில் 1000 தங்க காசுகளுடன் ஆடை !!
சமர்பித்த சக்தி அம்மா !!!
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்திற்காகவும் நாராயணி பீடத்தில் 1000 நாட்கள் நடந்த லலிதா சகஸ்ர நாமம் நிறைவு விழாவுக்குஸ்ரீபுரம் சக்தி அம்மா தலைமை தாங்கினார்.
நாராயணி பீடத்தில் லலிதா சகஸ்ரநாமம் யாகம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சக்தி அம்மாவால் தொடங்கப்பட்டு ஆயிரம் ஆவது நாள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை நிறைவு செய்யப்பட்டது.
மகாலட்சுமி அன்னைக்கு 1000தங்க காசுகளால் வடிவமைக்கப்பட்ட ஆடையினை சக்தி அம்மா சமர்ப்பித்தார். நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு ,நாராயணி பீட மேலாளர் சம்பத் ,உள்ளிட்ட வெளிமாநில,மாவட்ட, வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment