காட்பாடி அக்சிலியம் பெண்கள் கல்லூரியில் IAS பயிற்சி குறித்த கருத்தரங்கம்
வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி கலையரங்கில் ஆளுமை நுழைவாயில் குடிமை பணிகளின் நோக்குநிலை நெறி காட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை முன்னாள் மேயரும் மனித நேய இலவச ஐஏஎஸ் அகாடமி நிறுவனருமான சைதை . துரைசாமி கலந்து கொண்டார். கேள்விக்கான விடைகளை சரியாக கூறிய மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி செயலாளர் முனைவர் அருட்சகோதரி மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கியஜெயசீலி, ஆங்கில துறையை சேர்ந்த இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி வரவேற்றார். ஆங்கிலதுறை உதவி பேராசிரியர் முனைவர் லதா நன்றி கூறினார்.
Comments
Post a Comment