VELLOREHEADLINE: வேலூரில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2 - வது மாவட்ட மாநாடு....
வேலூர் மாவட்ட 108 -வது ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் 2 - வது மாநாடு வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் நவீன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ் முன்னிலை வகித்தார். முன்பாக தொழிற்சங்க கொடி முக்கிய நிர்வாகிகள் ஏற்றிவைத்தனர்.
பொறுப்பாள பீமாராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாநில செயலாளர் மகாதேவன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ். சென்னை மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார், மாநில பொருளாளர் சாமிவேல், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், அறிவியல் இயக்கம் விஸ்வநாதன் ,சாபுதீன், நிஷாம், வினோத், வழக்கறிஞர் சோனு, இயற்கை மருத்துவர் தமிழரசன். மாநில பிரதிநிதி பூசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment