Vishnu Sahera Mandali Group and Vellore Brahmin Association organized Tulsi Kalyana Vaipavam at Mangala Vinayagar Temple in Velloresatthuvachari. Two Sangha members participated in the puja.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தியும் துணைத்தலைவருமான காதம்பரி ஷரவன் கிருஷ்ணாவின் திருமணம் இன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பதி - திருமலையில் நடந்தது. இதில் ஆந்திரபிரதேச கவர்னர் அப்துல் நசீர் குடும்பத்துடன் வாழ்த்தினார். அருகில் விஐடிவேந்தர் ஜி.விசுவநாதன், பல்கலை துணைத்தலைவர்கள் சங்கர், சேகர், செல்வம் ஆகியோர் உள்ளனர்.வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் தனது குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினார்.....by variyar
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே பள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு உறுதிமொழி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே மழலையர் மற்றும் தொடக்கபள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . இதில் பள்ளி முதல்வர் எம்.பிரகாசம், தலைமை ஆசிரியர் ஹரிஷ்னி, துணை தலைமை ஆசிரியர் நர்மதா, ஆசிரியைகள் சுகன்யா, கலையரசி, உதவியார் வினிதா மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் பஜார் சார்பில் நடக்கும் கண்காட்சியை திறந்துவைத்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் !! வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் திவெல்லூர் கிராண்ட் பஜார் என்கின்ற பல்பொருள் மற்றும் கல்வி கண்காட்சியை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன். வேலூர் துணை மேயர் சுனில்குமார், ருக்ஜி ஜூவல்லர்ஸ் ரமேஷ்குமார் ஜெயின், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா, மற்றும் சுரேஷ்குமார், சுபுஹனி, சமூக ஆர்வலர் நோபல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
Comments
Post a Comment