VELLOREHEADLINE: பிரம்மபுரம் கிராமத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 108 - வது பிறந்தநாள் விழா
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் அதிமுக நிறுவுனர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் SRK அப்பு கலந்துகொண்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் ஒன்றிய செயலாளர் சுபாஷ், பிரம்மபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட மாநகர அமைப்பு சாரா அணி தலைவர் பிரகாசம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், கிளை செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழிற்நுட்ப மாநகர துணைத்தலைவர் கரண்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment