VELLOREHEADLINE
VELLOREHEADLINE (online):03.10.2025 வேலூர் தோட்டப்பாளையம், தந்தி அலுவலகம் அருகே, மஸ்ஸல் பிலக்ஸ் ஜிம் திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம், தந்தி அலுவலகம் அருகே, தனலட்சுமி வங்கி மேல் மாடியில், மஸ்ஸல் பிலக்ஸ் ஜிம் திறப்பு விழா, பி.கே.ஸ்ரீனிவாசன் ஹேமலதா மற்றும் சன்ஸ், எஸ்.சூர்யா, எஸ்.கார்த்தி ஆகியோர் தலைமையில் ஜிம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பிட்னெஸ் பயிற்சியாளர் சதீஷ்குமார், மஸ்ஸல்ஸ் இன்ஜினியர் - இயக்குனர் ஜோதி மணிகண்டன் மற்றும் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்பித்தனர். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள், பகுதிமக்கள், பிட்னஸ் பயிற்சியாளர்கள் தொழிலதிபர்கள் மற்றும் பி.கே.ஸ்ரீனிவாசன் ஹேமலதா குடும்பத்தினர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment