VELLOREHEADLINE
VELLOREHEADLNE(online): 18.11.2025
வேலூர் அடுத்த கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6,2 கி.மீ. நடைபாதை, படகு குழாம். செயற்கை மண் திட்டுக்கள் அமைத்து ரூ.36-59 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலமாக்கி அதனை பொதுமக்களுக்கு நேற்று இரவு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ அமலு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (பொதுப்பணி) திலகம், மேயர் சுஜாதா துணை மேயர் சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன்,துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பகுதிபொதுமக்கள் என பலர் பங்குகொண்டனர். மேலும் அமைச்சர் ரூ.20.9 கோடி மதிப்பீட்டில் காட்பாடியில் 3 வெள்ள தடுப்பு பணிகள், கழிஞ்சூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள தரைப்பாலத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் தொகுதியின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. by variyar
Comments
Post a Comment