VELLOREHEADLINE:காட்பாடி வண்டறந்தாங்கல் கிராமத்தில் குடியரசு தின விழா முன்னிட்டு கிராமசபை கூட்டம்
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சியில் குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடி ஏற்று விழா மற்றும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தலைவர் ராகேஷ்
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த எஸ்.பி.ராகேஷ் ரெட்டியார் இருந்து வருகின்றார்.
இந்தியாவின் 77 -வது குடியரசு தினவிழா முன்னிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் காலை தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார்.பின்பு முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து ஆவன செய்வதாக கூறினார். குடியரசு தினவிழா மற்றும் கிராமசபை கூட்டத்தில் செயலாளர், துணைத்தலைவர், கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.....by variyar
Comments
Post a Comment