பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய ஆற்காடுதாசில்தார் ரமேஷ், டிரைவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செய்யானந்தம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் இவருக்கு சொந்தமாக இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் 51 சென்ட் இடம் உள்ளது. இது தவறுதலாக யூ டி ஆர் பதிவேட்டில் தவறுதலாக பட்டா மாற்றம் பெற்று புறம்போக்கு இடமாக மாறியுள்ளது.
இந்நிலையில் அந்த தவறை சரி செய்வதற்காக
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சகாதேவன் பட்டா மாற்றம் செய்ய கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரி மனு அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை மாவட்டமாக பிரித்த பின்பு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இது தொடர்பாக கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பட்டா மாற்றம் பெற்ற 51 சென்ட் இடம் மீண்டும் சாகாதவனுக்கு சொந்தமான பட்டா மாறுதல் பெற்று வந்த நிலையில் அதனை சகாதேவனிடம் வழங்க ஆற்காடு வட்டாட்சியர் சுரேஷ் ரூபாய் 25000 லஞ்ச பணம் கேட்டு இறுதியில் 15000 கொடுக்க கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சகாதேவன் பட்டா மாறுதல் பெற்ற ஆவணத்தை பெற ரூபாய் 15,000 பணத்தை வட்டாட்சியர் ஓட்டுநர் பார்த்திபனிடம் வழங்கியபோது மறைந்திருந்த ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் பணத்தை பெற்றுக்கொள்ள சொன்ன ஆற்காடு வட்டாட்சியர் சுரேஷ் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடிபட்டனர் இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்
Comments
Post a Comment