வேலூர்ஹெட்லைன்ஸ் - வேலூரில் மக்கள் நீதிமய்யம் அலுவலகம் திறப்பு விழா !!!.
வேலூரில் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடி விழா !!!
வேலூரில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் பைபாஸ் சாலை அலுவலகம் மற்றும் நகரின் பலபகுதியில் கட்சியின் கொடி ஏற்று விழா நடந்தது.
வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்டாலின் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு, மாநில செயலாளர் சிவ.இளங்கோ. காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் எஸ்.பி.சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மண்டல அமைப்பாளர் ஏசு, வேலூர் மாவட்ட துணைசெயலாளர் ரஞ்சித்குமார், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், சக்திவேல், விக்ரம் சக்கரவர்த்தி, கார்த்திக், ராஜா, முரளி, மகேஷ், ஆதிபாஷா, சௌந்தர், அபிஷேக், இலக்கியா, ப்ரியா, கார்த்திக், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment