VELLOREHEADLINES : காட்பாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி பிறந்தநாள் விழா !!
வேலூர் அடுத்த காட்பாடியில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் பிறந்தநாள் முன்னிட்டு பூஜை மற்றும் அன்னதானம் !!!
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகரம் மற்றும் காட்பாடி ஒன்றியம் அமமுக சார்பில் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பிறந்தநாள் முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் விசேஷ பூஜை மற்றும் ஏழைகளுக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காட்பாடி ஒன்றிய செயலாளர் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்தர் கணேஷ் தலைமை தாங்கினார்.
மாநகர மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.ராஜா, அகில இந்திய எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, முன்னாள் வேலூர் துணை மேயர் தருமலிங்கம், தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் சதீஷ்குமார் ஆகியோர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
மாநகர சோளிங்கர் ஒன்றிய செயலாளர் பாபு, மாநகர நிர்வாகிகள் பாலகணேஷ், கோரந்தாங்கல் ஐஸ் வெங்கடேசன், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment