வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் 69-வது விளையாட்டு விழா !!




வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியின் 69 வது ஆண்டு விளையாட்டு விழா அங்குள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .
பல்வேறு விளையாட்டு போட்டிகளின் இறுதிப்போட்டி  நடைபெற்றது.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முனைவர் அருட்சகோதரி அ. மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சூ. அக்ஸிலியா ஆண்டனி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அ.ஜெயசீலி, தேர்வாணையர் மற்றும் இயற்பியல்துறை தலைவர் முனைவர் அருட்சகோதரி சே. வின்சி, துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. அமலா வளர்மதி, ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ. மலர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்று மற்றும் பரிசு கோப்பைகளை  ( ஷீல்டு) வழங்கினார்.
விழாவில் கல்லூரி பேராசிரியைகள், உதவி பேராசிரியைகள், பயிற்றுநர்கள், மாணவிகள், கல்லூரி அலுவலக பணியாளர்கள் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக 2023 - 2024-ம் ஆண்டிற்கான விளையாட்டு துறை ஆண்டறிக்கையை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் பா. பிந்து வாசித்தார்.
முடிவில் தமிழ்த் துறைப் பேராசிரியை முனைவர் வெ.ரா.மீனாட்சி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE