வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியின் 69 வது ஆண்டு விளையாட்டு விழா அங்குள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . பல்வேறு விளையாட்டு போட்டிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் முனைவர் அருட்சகோதரி அ. மேரி ஜோஸ்பின் ராணி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சூ. அக்ஸிலியா ஆண்டனி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அ.ஜெயசீலி, தேர்வாணையர் மற்றும் இயற்பியல்துறை தலைவர் முனைவர் அருட்சகோதரி சே. வின்சி, துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. அமலா வளர்மதி, ஆகியோர் முன்னிலை வசித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேலூர் கல்வி இணை இயக்குநர் முனைவர் அ. மலர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்று மற்றும் பரிசு கோப்பைகளை ( ஷீல்டு) வழங்கினார். விழாவில் கல்லூரி பேராசிரியைகள், உதவி பேராசிரியைகள், பயிற்றுநர்கள், மாணவிகள், கல்லூரி அலுவலக பணியாளர்கள் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக 2023 - 2024-ம் ஆண்டிற்கான விளையாட்டு துறை ஆண்டறிக்கையை கல்லூரி உ...
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே பள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு உறுதிமொழி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் எம்பிகே மழலையர் மற்றும் தொடக்கபள்ளியில் உலக தாய்மொழி நாள் முன்னிட்டு ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . இதில் பள்ளி முதல்வர் எம்.பிரகாசம், தலைமை ஆசிரியர் ஹரிஷ்னி, துணை தலைமை ஆசிரியர் நர்மதா, ஆசிரியைகள் சுகன்யா, கலையரசி, உதவியார் வினிதா மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர் அடுத்த காட்பாடி பவானி நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றி அன்னதானம் வழங்கினர். வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகர் ( 7-வது வார்டு) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேலஷ்சி திரையரங்கம் எதிரில் கட்சி கொடியை காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றிய பொறுப்பாளர் நவீன் ஏற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் தாஹிராபானு, இப்ராஹிம் ,பாவனி நகர் பொறுப்பாளர்கள் கார்த்தி, மோகன், வெங்கட், அண்ணாமலை, நந்தா, பிரபு, பிரகாஷ், விக்னேஸ்வரன், மோகன்லால், ஹரி, நித்யாதரன், ராஜா, பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment