VELLOREHEADLINE: ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஇராமானுஜரின் 1009- வது அவதார தினம்
ஸ்ரீபெரும்புதூரில் வைணவ குருவானஸ்ரீராமானு ஜரின் 1012-வது மஹோற்சவம் முன்னிட்டு திருத்தேர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவபெருமாள் குடிகொண்டு இருக்கும் தளத்தில் வைணவ குருவாக அவதரித்தவர் ஸ்ரீராமானுஜர், இவர் வைணவ தொண்டு ஆற்றி அனைவரையும் வழிநடத்தியவர். இவரின் 1012-வது மஹோற்சவம் (1009பிறந்தநாள்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆதிகேசவபெருமாள் ஆசியுடன், இராமானுஜர் திருத்தேர் புஷ்ப பல்லக்கில் செவ்வாய்கிழமை வீதியுலா வந்து அருள்பாலித்தார். புதன்கிழமை கந்தப்பொடி உற்சவமும் நடந்தது. அதேப்போல் அன்னதானம் ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிவர் சன்னதியில் நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்றன. மேலும் அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் கூட்டமைப்பு (AIVF)சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment