VELLOREHEADLINE: ஆவினில் பணிபுரிந்த அலுவலர் செல்வத்திற்கு காட்பாடியில் பணிநிறைவு பாராட்டு விழா
வேலூர் அடுத்த காட்பாடியில் ஆவினில் விரிவாக்க அலுவலராக பணிபுரிந்த செல்வத்திற்கு பணிநிறைவு பாராட்டு விழாவில் பொதுமேலாளர் தனப்பாலன் பங்கேற்பு
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் (aavin) விரிவாக்க அலுவலர் நிலை 1 பணிபுரிந்து ஓய்வுபெற்ற எல். செல்வத்திற்கு பணிநிறைவு பாராட்டு விழா வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள தனியார் ஹாலில் நடந்தது.
இதில் வேலூர் மாவட்ட ஆவின் பொதுமேலாளர் டாக்டர் தனப்பாலன் , ஓய்வுபெற்ற அலுவலர் செல்வத்திற்கு சால்வை அணிவித்து பணி குறித்து பேசினார். இதில் அரசியல் பிரமுகர் அப்பு பால்பாலாஜி, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், அரசு மற்றும் கூட்டுறவு துறை, ஆவின் அலுவலர்கள், பணியாளர்கள், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
ஓய்வுபெற்ற அலுவலர் செல்வம் ஏற்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணிமேகலைசெல்வம், கீர்த்திவாசன் குடும்பத்தார் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment